1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Narayanamurthy works 80 to 90 hours a week Sudha Murthy

நாராயணமூர்த்தி வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்கிறார்- சுதா மூர்த்தி

Narayama murthy - sutha
இந்திய ஐடி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம் இன்போசிஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தை நாராயண மூர்த்தி தன் நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார்.

இன்று இந்தியாவில் முன்னணியில் உள்ள ஐடி நிறுவனங்களில்  ஒன்றாக விளங்குகிறது. உலகில் முக்கிய நாடுகளுக்கு இந்த தயாரிப்புகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் நாராயண மூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம்  உழைக்க வேண்டுமெனக் கூறியிருந்தார்.

இது இந்தியாவில் பேசு பொருளாகியுள்ள நிலையில், நாராயண மூர்த்தி வாரம் 90 மணி நேரம் வேலை செய்கிறார் என அவரது மனைவி  சுதார் மூர்த்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; நாராயணமூர்த்தி வாரத்திற்கு 80 முதல் 90 மணி நேரம் உழைக்கிறார். அதற்குக் கீழ் உழைப்பது என்றால் அவருக்கு என்னவென்றே தெரியாது. அவர் கடின உழைப்பை நம்புகிறவர் என்று தெரிவித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
டெங்கு காய்ச்சல்.. சென்னை சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்..!