1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

ஒரே நாளில் 16,620 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சியில் மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 620 பேர்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் 
 
மேலும் குறிப்பாக நாக்பூர் மற்றும் லத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது அதேபோல் நாசிக், புனே, நவி மும்பை, தானே ஆகிய பகுதிகளிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியதை அடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பதும் தற்போது 1,26,237 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது