1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (22:27 IST)

இன்று ஒரே நாளில் 14317 பேர்களுக்கு கொரோனா: மோசமான நிலையில் மகாராஷ்டிரா

இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மிக அதிகமாக நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம் 
 
குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 14317 போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதில் புனே என்ற நகரத்தில் மட்டும் 2500-க்கும் அதிகமானவர்களும் நாக்பூரில் மட்டும் 2150 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். மும்பையில் 1500 தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இன்று ஒரே நாளில் கொரோன வைரஸால் மகாராஷ்டிரா மாநிலத்தில் 57 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நாக்பூரில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விரைவில் அமல்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது