சிவன் கோவிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம்!
சிவன் கோவிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம்!
பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் ஒரு முஸ்லிம் காதல் ஜோடி திருமணம் செய்துகொண்ட அதிசய சம்பவம் நடந்துள்ளது.
பீகாரின் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் முகமது சோஹன் மற்றும் நியுருஷா ஆகியோர். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் தங்கள் காதல் திருமணத்துக்கு சம்மதிக்காத நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய இந்த காதல் ஜோடி அந்த பகுதியில் உள்ள சிவன் கோவிலில் ஊர் பஞ்சாயத்து தலைவர், பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
சிவன் கோயிலில் இந்த திருமணம் நடந்தாலும் அந்த திருமணம் இஸ்லாமிய முறைப்படியே நடந்தது. சிவன் கோயிலில் தங்களுக்கு திருமணம் நடந்ததால் அந்த காதல் தம்பதிகள் மிகுந்த மகிழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாட சிவன் கோவிலுக்கு வருவதாக கூறியுள்ளனர்.