1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 13 ஜூன் 2016 (13:29 IST)

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பிரிச்சி மேயும் மாணவிகள்: என்னா... அடி! (வீடியோ இணைப்பு)

மத்திய பிரதேச மாநிலத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இசை ஆசிரியரை தெருவில் வைத்து மாணவிகள் தர்ம அடி கொடுக்கும் விடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


 
 
மத்திய பிரதேசம், மன்சூரில் இசை பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் நிரஞ்சன் பட்னாகர். இவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். கேலி, கிண்டல் செய்வது, பாலியல் ரீதியாக சீண்டுவது என மாணவிகளுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் அவர்.
 
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் தங்கள் ஆண் நண்பர்களின் துணையுடன் அந்த ஆசிரியரை தெருவில் இழுத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆசிரியர் தப்பிக்க முயற்சி செய்தாலும், விடாமல் அவரை சகட்டு மேனிக்கு அடித்தனர்.
 
 

நன்றி: B TV
 
ஆசிரியரின் ஆடை கிழிய கிழிய மாணவிகள் அவரை புரட்டி எடுக்கும் வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.