வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (10:42 IST)

நாய்களுக்கு உணவளித்த பெண்ணுக்கு 7 லட்சம் அபராதம்! – மும்பையில் அதிர்ச்சி!

மும்பையில் நாய்களுக்கு உணவளித்த பெண் ஒருவருக்கு குடியிருப்பு நிர்வாகம் 7 லட்சம் அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள என்.ஆர்.ஐ காம்ப்ளக்ஸ் என்ற குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் அன்சு சிங் என்ற பெண். இவர் இவரது குடியிருப்பு வளாகத்திற்குள் இரண்டு நாய்கள் இருந்து வந்துள்ளன. வயதான அவை வெளியே உணவு தேடி சென்று சிரமப்படுவதை கண்ட அன்சு சிங் அவற்றிற்கு தினசரி உணவு கொடுத்துள்ளார்.

இதற்காக அவரை கண்டித்த குடியிருப்பு நிர்வாகம், குடியிருப்புக்குள் மற்ற விலங்குகளுக்கு உணவளிக்க கூடாது என்று சட்டம் உள்ளதாகவும், அதனால் ரூ.7 லட்சம் அபராதம் செலுத்துமாறும் கூறியுள்ளது. ஆனால் விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்கு அபராதம் விதிப்பது சட்டத்திற்கு புறம்பானது என குடியிருப்பு நிர்வாகம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.