1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (08:47 IST)

செவிலியர் உடையில் மருத்துவமனைக்கு சென்ற மேயர்! பின்னணி என்ன?

மும்பையில் மருத்துவமனைக்கு செவிலியர் உடை அணிந்து கொண்டு சென்றுள்ளார் மேயர் கிஷோரி பட்னேகர் .

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் முன்னணி படைவீரர்களாக இருந்து கொரோனாவை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையின் மேயர் கிஷோரி பட்னேகர் நேற்று செவிலியர் சீருடை அணிந்து மும்பையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர் பேசியுள்ளார். கிஷோரி ஒரு முன்னாள் செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தெரிவித்துள்ள கிஷோரி பட்னேகர், தானும் அவர்களில் ஒருவர் என்பதை காட்டவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த கடினமான சூழ்நிலையில் நாம் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கும்தான் அவ்வாறாக சென்றதாக அவர் கூறியுள்ளார்.