செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஜூலை 2023 (16:26 IST)

சைவம், அசைவ மாணவர்களுக்கு தனித்தனி தட்டு.. ஐஐடி கேண்டீனில் சர்ச்சை போஸ்டர்..!

மும்பை ஐஐடி வளாகத்தில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு தனித்தனி தட்டு கொடுப்பதாகவும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அனுமதி இல்லை என்று  விளம்பரம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை ஐஐடி வளாகத்தில் உள்ள கேண்டீனில் சைவம் உண்பவர்களுக்கு மட்டுமே இங்கு உட்கார அனுமதி உண்டு என  ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் சைவம் சாப்பிடுவதற்கு என ஒதுக்கப்பட்ட பகுதியில் அசைவம் சாப்பிடுவார்கள் உட்கார்ந்து சாப்பிட்டால் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும் மாணவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மேலும் சைவம் அசைவம் உண்பவர்களுக்கு தனித்தனி தட்டுகள் பரிமாறப்பட்டு வருவதாகவும் அதுமட்டுமின்றி தனித்தனி அடுப்புகளில் தான் சைவம் அசைவம் சமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 
 
 
Edited by Siva