ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2024 (09:23 IST)

நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? சிறையில் நடந்தது என்ன?

உத்தர் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிழல் உலக தாதா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவரது மகன் சிறையில் தனது தந்தைக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தையே அதிர வைத்தவர் நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி என்பதும் இவர் தனது 17 வயதில் இருந்தே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர் மீது கடந்த ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1996 முதல் தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பதவி வகித்த இவர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை கொலை செய்ததால் அதில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்றார்.

இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக இவர் சிறையில் இருக்கும் நிலையில் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் தனது தந்தை தந்தைக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது மகன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva