வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (08:24 IST)

நீதிபதி முன் நிர்பயா தாயும், குற்றவாளியின் தாயும் நடத்திய நெகிழ்ச்சியான உரையாடல்!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நான்கு பேர்களுக்கு நேற்று தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு அவர்கள் நால்வரும் வரும் ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என நீதிமன்றம் அறிவித்தது
 
இந்த நிலையில் நீதிபதி இந்த உத்தரவை அறிவிக்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் தாயார் நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாயாரிடம் தனது மகனை மன்னித்து விடுமாறு கெஞ்சினார். அப்போது நிர்பயா ’எனக்கும் ஒரு மகள் இருந்தாள், ஆனால் அவளுக்கு நேர்ந்த கதி என்ன என்று உங்களுக்கு தெரியுமே. அதை என்னால் எப்படி மறக்க முடியும் என்று அவர் கூறியது கூறியதும் நெகழ்ச்சியாக இருந்தது 
 
இந்த உரையாடலை நீதிபதி கவனித்துக் கொண்டிருந்த போது நீதிபதியிடம் சென்று கெஞ்சி அந்த தாய் ’என் மகனை தயவு செய்து மன்னித்து விடுங்கள், என் மகனுக்காக மன்றாடிக் கேட்கிறேன் என்று கூற, அதற்கு நீதிபதி இந்த விஷயத்தில் கருணை காட்ட முடியாது என்று மறுத்துவிட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்
 
குற்றவாளி முகேஷ் தாயார் நீதிபதியிடமும் நிர்பயாவின் தாயிடமும் கெஞ்சிய சம்பவத்தால் நீதிமன்ற வளாகமே உருக்கமாக இருந்தது