பரபரப்பு போஸ்டர்: எம்.பியை காணவில்லை கண்டுபிடித்தால் பரிசு வழங்கப்படும்
பீகாரில் எம்.பி சவுத்திரி மெகபூப் படத்தை போட்டு இவரை காணவில்லை, கண்டுபிடித்தால் தந்தால் பரிசு வழங்கப்படும் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் கங்கை வெள்ளம் காரணமாக 12 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் மக்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மாநில முதலைமைச்சர் உள்பட மாநில, மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் காகாரியா மாவட்டத்தின் உள்ளூர் எம்.பி.யான லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சவுத்திரி மெகபூப் அலி பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் சென்று சந்திக்காததால் மக்கள் ஆவேசம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து காகாரியா பகுதியில் சவுத்திரி மெகபூப் அலி படத்தை போட்டு இவரை காணவில்லை, கண்டுபிடித்து தந்தால் பரிசு வழங்கப்படும் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.