1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 29 ஜூன் 2017 (17:39 IST)

ஜிஎஸ்டி வரி விதிப்பு : சினிமா டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

மத்திர அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பின் படி சினிமா டிக்கெட் விலை ஏகத்துக்கும் உயரும் எனத் தெரிகிறது.


 

 
தற்போது நடைமுறையில் உள்ள பல வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) சட்டத்தை மத்திய அராசு கொண்டு வந்தது. அதன் படி சினிமாவிற்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக சினிமா டிக்கெட்டின் விலை உயரும் எனத் தெரிகிறது. ஏற்கனவே, இந்த வரியை குறைக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். எனவே, ரூ.100 மற்றும் அதற்கும் குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கன வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ.100க்கும் கூடுதலான  சினிமா டிக்கெட்டுக்கான வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி அமுலுக்கு வருகிறது. அதன் படி ரூ.120 விலை உடைய டிக்கெட் இனி 28 சதவீத ஜி.எஸ்.டி வரியை சேர்த்து ரூ.153.60 ஆக உயரும். அநேகமாக அந்த டிக்கெட் இனிமேல் ரூ.150 க்கு விற்கப்படும் எனத் தெரிகிறது. 
 
இந்த விலை உயர்வு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதேபோல் ரூ.100-க்கும் குறைவான விலையுடைய டிக்கெட், விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.