வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 4 நவம்பர் 2024 (07:09 IST)

கடன் தொல்லை: 9000 ரூபாய்க்கு பெற்ற மகனை விற்ற தாய்.. அதிர்ச்சி சம்பவம்..!

வறுமை மற்றும் கடன் காரணமாக பெற்ற குழந்தையை 9 ஆயிரம் ரூபாய்க்கு தாய் விற்ற சம்பவம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஹருண்- ரஹானா தம்பதிக்கு மொத்தம் எட்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில், கடன் தொகையை செலுத்த முடியாமல் இருந்தனர்.

இதையடுத்து, நிதி நிறுவனம் சார்பில் ஹருண் - ரஹானா  தம்பதியிடம் கடன் செலுத்துமாறு நெருக்கடி கொடுத்தனர். இதனால், ஒரு கட்டத்தில் அந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல், தனது குழந்தைகளில் ஒருவரை விற்க ஹருண் - ரஹானா முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர், ஹருணின் மனைவி ரஹானா தனது தம்பியை அனுப்பி, தனது ஆண் குழந்தையை விற்க ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பகுதியில் இருந்த ஒருவர் குழந்தையை 45 ஆயிரம் ரூபாய்க்கு பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காவல்துறையினர் தகவல் அறிந்தவுடன் உடனடியாக விசாரணை செய்து, குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva