செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2017 (20:38 IST)

உலக அழகி மனுஷி சில்லர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இந்தியாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி மனுஷி சில்லார் சமீபத்தில் உலக அழகி பட்டத்தை வென்ற போது பிரதமர் மோடி அவருக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று உலக அழகி மனுஷி சில்லார், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக தனது குடும்பத்தினர்களுடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். 17 ஆண்டுகளுக்கு பின்னர் உலக அழகி பட்டம் வென்ற மனுஷியை பிரதமர் மோடி வாழ்த்தும் காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது

முன்னதாக உலக அழகி மனுஷி சில்லார் தனது சொந்த மாநிலமான ஹரியானா மாநிலத்தின் முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.