செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2018 (16:45 IST)

10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆசிரியர் பணி; அதிர்ச்சியில் பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்பவில்லை. இதன் காரணம் குறித்து அறிய ஹர்ப்ரீத் சிங் சாந்து என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் செயல்படும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் தகுதி குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
 
இதன் அடிப்படையில் பெறப்பட்ட தகவலில் ஆசிரியர்களாக பணியாற்றும் 59 பேர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் என்ர தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 59 பேரில் 39 பேர் கணிதத்திலும், 10 பேர் ஆங்கிலத்திலும், 11 பேர் சமூக அறிவியலிலும் தேர்ச்சி பெறாதவர்கள். 
 
துவக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 1 லட்சம் மாணவர்கள் கணிதத்திலும், 70 ஆயிரம் மாணவர்கள் ஆங்கிலத்திலும் தோல்வி அடைந்துள்ளனர். மேலும் மாவட்ட நிலவரப்படி 313 ஆசிரியர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆரவலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.