புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2016 (19:21 IST)

100 ஆண்டுகளுக்கு பிறகு உயிர்பிழைப்பேன்: 14வயது சிறுமியின் உடலை பதப்படுத்த ஐகோர்டு அனுமதி

லண்டனை சேர்ந்த 14 வயது சிறுமி நோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருப்பதால், அவரது கடைசி ஆசைப்படி உடலை 100 ஆண்டுகளுக்கு பதப்படுத்தி வைக்க அந்நாட்டு உயர் நீதிமன்றம் அனுமது அளித்துள்ளது.


 

 
லண்டனை சேர்ந்த 14 வயது நோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் உள்ளார். தற்போது உள்ள நவீன மருத்துவமுறையால் பெரும்பாலும் அனைத்து நோய்களுக்கும் தீர்வுள்ளன. அதுபோல எதிர்காலத்தில் இறந்தவர்களை உயிருடன் மீட்கவும் மருத்துவத்தில் புரட்சி ஏற்படலாம்.
 
இதைக்கருத்தில் கொண்டு அந்த சிறுமி, தான் 100 ஆண்டுகளுக்கு பிறகு உயிர் பிழைப்பேன் என்றும், அதுவரை தனது உடலை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டுள்ளார்.
 
இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்து வந்த அந்த சிறுமியின் பெற்றோர், பின் அவர்களது குழந்தையின் கடைசி ஆசை என்பதால் அந்நாட்டு உயர் நீதிமன்றத்தை அனுகினார்கள்.
 
இதுகுறித்து அந்த சிறுமி கூறியதவது:-
 
எனக்கு வயது 14 தான். நான் உயிரிழக்க விரும்பவில்லை. நான் வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் மரணப்படுக்கையில் இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருப்பதை உனர்க்கிறேன். 
 
நான் 100 ஆண்டுகளுக்கு பிறகு உயிர் பிழைப்பேன். நவீன மருத்துவ புரட்சியில் என் நோயை குணப்படுத்தும் முறை எதிர்காலத்தில் ஏற்படலாம். அதனால் அதுவரை என் உடலை பாதுகாக்க வேண்டும், என்றார்.
 
உயர் நீதிமன்றம் அந்த சிறுமியின் விருப்பத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவின் மெக்சிகன் மாநிலத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் கிரையோஜெனிக் முறையில் -196 டிகிரி செல்சியஸ் நிலையில் பதப்படுத்தப்பட உள்ளது. 
 
இதுபோன்று பதப்படுத்தப்படும் உடலானது, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவற்றின் திசுக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.