வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் !
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் செப்டம்பர் 24 ஆம் தேதி வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மற்றும் மத்திய பாஜக அரசில் நிகழ்த்தப்படும் கும்பல் படுகொலைகள் ஆகியவற்றை வெளிநாட்டு ஊடகங்கள் சிறப்பாக வெளி உலகத்துக்கு எடுத்துக் காட்டிக் கொண்டு வருகின்றன. மேலும் மத்திய பாஜக அரசு எடுக்கும் முடிவுகளில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு பற்றியும் எடுத்து சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளை எடுத்து சொல்வதற்காக அதன் தலைவர் மோகன் பகவத் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் ஒரு கூடுகைய நடத்த இருக்கிறார். இதற்கு முன்பாக அவர் வெளிநாட்டு தூதர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.