வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (17:40 IST)

5 வருடம் வாய்ப்புக் கொடுத்தற்கு நன்றி – மோடியின் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

மக்களவைத் தேர்தலின் இறுதி வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் இன்றோடு முடிகிறது. இதையடுத்து மோடி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிப்வு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 21 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சாரம் இன்றோடு முடிகிறது.

இதையடுத்து பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் இன்று கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி ‘தேர்தல் பரப்புரை மேற்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இனி கொஞ்சம் நாட்கள் இளைப்பாறுவேன். தேர்தலை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி. மக்கள் பாஜகவை மீண்டும் தேர்ந்தெடுக்க உறுதியாக உள்ளனர். நாட்டின் நிர்வாக முறைகளில் நாங்கள் நிறைய சீர் திருத்தங்களை கொண்டு வந்து இருக்கிறோம். மீண்டும் வெற்றி பெற்று நாட்டை நாங்களே ஆளுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.