புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (19:51 IST)

பிரதமர் மோடியால் பிரபலமான டீ கடை! - சுற்றுலா பகுதியாகிறது!!!

குஜராத்தில் பிரதமர் மோடி தேனீர் விற்பனை செய்து வந்த டீ கடையை சுற்றுலா தளமாக்க முடிவு செய்துள்ளனர்.

குஜராத்தில் வட்நகரில் பிறந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் சிறு வயதில் தந்தைக்கு உதவியாக வட்நகர் ரயில் நிலையத்தில் உள்ள தனது தந்தையின் கடையில் டீ விற்றார்.

தற்போது அவர் டீ விற்ற அந்த கடை கேட்பாரற்று பழமையடைந்து கிடக்கிறது. பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த நாளில் அவர் பிறந்த வட்நகரையும், அவரது டீ கடையையும் சுற்றுலா தளமாக மாற்ற குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

வட்நகரில் ஏற்கனவே பழங்கால சிற்பங்கள் சில கண்டெடுக்கப்பட்டிருப்பதாலும், புத்த விஹார் குறித்த அகழ்வாராய்ச்சிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாலும் அந்த இடத்தை சுற்றுலா தளமாக மாற்றுவது மோடிக்கு பெருமை அளிக்கும் விதமாகவும், குஜராத் சுற்றுலா துறைக்கு வருமானம் ஈட்டும் வகையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக வட்நகர் ரயில்சேவை தொடங்கி, போக்குவரத்து சாலைகள் வரை அனைத்தும் மேம்படுத்தப்பட இருக்கின்றன.