வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (17:39 IST)

தலித் எம்.பி.யை ஊருக்குள் அனுமதிக்காத கிராம மக்கள்..

தலித் எம்.பி.யை ஒரு கிராமத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட தீண்டாமை சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி.யான ஏ.நாராயணசாமி, பட்டியிலினத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவர் தனது தொகுதிக்குட்பட்ட பாவாகடா கிராமத்திற்கு மருத்துவர்கள் மற்றும் மருந்தக நிறுவன அதிகாரிகளுடன் சென்றுள்ளார்.

அப்போது ஏ.நாராயணசாமி எம்.பி.யானாலும் அவர் ஒரு பட்டியலினத்தைச் சார்ந்தவர், ஆதலால் அவரை நாங்கள் ஊருக்குள்ளே அனுமதிக்கமாட்டோம் என கிராம மக்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அம்மாவட்ட எஸ் பி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான விரிவான அறிக்கையை கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா அறிவியல் வளர்ச்சியிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் ஒரு பக்கம் முன்னேறிக் கொண்டிருந்தாலும், தீண்டாமையும் ஜாதி கொடுமைகளும் கிராமங்களில் இப்பொழுதும் நடைமுறையில் உள்ளது, சமூக நீதி குறித்த உரையாடல்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.