1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2016 (17:58 IST)

ஜெ.வின் உடல் நிலை பற்றி முதல் முறையாக விசாரித்த மோடி

டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அவைக் கூட்டத்தின் போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி, அதிமுக அமைச்சர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.


 

 
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோவில் கடந்த 2 மாத காலமாக சிகிச்சை எடுத்து வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட, அவரது உடல் நலம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தனர். 
 
ஜெ.வின் உடல் நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி சென்னை அப்பல்லோவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. 
 
இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அவைக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டார். மதிய உணவு இடைவேளையில், அவர் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் மற்றும் மற்ற சில அதிமுக எம்.பி.க்களிடம் ஜெ.வின் உடல் நலம் குறித்து விசாரித்தார். 
 
மேலும், “ஜெயலலிதா போர்க்குணம் கொண்டவர். எனவே விரைவில் அவர் நலம் பெற்று வருவார்”என அவர் அதிமுக எம்.பி.க்களிடம் கூறினார்.