வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (21:26 IST)

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு! ஆனால்...

பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்கவுள்ள நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் உள்பட வெளிநாட்டு பிரமுகர்களுக்கும், ஓபிஎஸ், ஈபிஎஸ், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழக பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என்றும், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகிய இருவரும் கலந்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மீதுள்ள மரியாதை காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடியை ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்ததன் காரணமாக அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.