வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (18:01 IST)

இந்திரா காந்தி பிரதமரானதும் எனது தந்தை பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Jaishankar
இந்திரா காந்தி பிரதமரானதும் முதல் வேலையாக எனது தந்தை பதவி நீக்கம் செய்யப்பட்டார் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
டெல்லியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி அளித்த போது இந்திரா காந்தி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதும் எனது தந்தை பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் பாதுகாப்பு துறையில் உள்ள அவர் மிகுந்த அறிவு உள்ளவர் என்றும் அவர் தெரிவித்தார். 
 
எனது தந்தை நேர்மையானவர் என்றும் அதனால் கூட அவருக்கும் பிரதமருக்கும் பிரச்சனை இருந்திருக்கலாம் என்றும் அது பற்றி எனக்கு தெரியாது என்றும் ஆனால் உண்மையானவர் என்றும் தெரிவித்தார். 
 
இந்திரா காந்தியை அடுத்து ராஜீவ் காந்தி காலத்தில் கூட அவர் மீண்டும் பதவியில் பணியமத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஜெயசங்கரின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva