திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (08:56 IST)

இந்தியாவில் 2026-ல் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படுவது எப்போது? மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் விரைவில் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் 2026 ஆம் ஆண்டு இந்தியாவில் புல்லட் ரயில் இயங்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்

புல்லட் ரயில் அறிமுகம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதாகவும் முதல் கட்டமாக 290 கிலோமீட்டர் தொலைவிற்கு கட்டமைப்பு பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

8 ஆறுகள் மீது பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றதாகவும் 12 ரயில் நிலையங்கள் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் 2026 ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்து புல்லட் ரயில் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புல்லட் ரயில் இயங்க வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியனின் கனவாக இருக்கும் நிலையில் அந்த கனவு 2026 ஆம் ஆண்டு நினைவாகும் என்ற அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனா ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டுமே புல்லட் ரயில்கள் இருக்கும் நிலையில் இந்தியாவுக்கும் மிக விரைவில் புல்லட் ரயில் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva