1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 மே 2023 (05:01 IST)

மிக் – 21 ரக போர்விமானங்கள் இயக்கம் நிறுத்தம்? – விமானப்படையின் திடீர் முடிவு!

MiG 21
இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் மிக் – 21 ரக போர் விமானங்களை தற்காலிகமாக நிறுத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய விமானப்படையில் பல்வேறு ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பிரபலமான ஒன்று மிக் – 21 ரக போர் விமானங்கள். சோவியத் காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மிக் – 21 ரக போர் விமானங்கள் கடந்த 1960ம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில காலமாக இந்த மிக் – 21 ரக போர் விமானங்கள் விபத்துகளை சந்திப்பது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தானில் மிக் – 21 ரக போர் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். இந்நிலையில் மிக் – 21 ரக போர் விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க விமானப்படை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிக் – 21 ரக போர் விமானங்களின் பாதுகாப்பு பரிசோதனை முழுவதுமாக செய்யப்பட்டு பின்னர் அவற்றை மீண்டும் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K