செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 8 நவம்பர் 2017 (10:31 IST)

விமான நிலையத்தில் பயணியை தாக்கிய ஊழியர்கள் - அதிர்ச்சி வீடியோ

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் பயணி ஒருவரை விமான நிலைய ஊழியர்கள் தாக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நேற்று இரவு பெரும்பாலான வட இந்திய தொலைக்காட்சி சேனல்களில் ஒரு வீடியோ வெளியானது. விமான நிலையத்தில் பயணி ஒருவரை ஊழியர்கள் தாக்குவது அதில் படம்பிடிக்கப்பட்டிருந்தது. இதுக்கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
 
இந்நிலையில்,  இதுபற்றி கருத்து தெரிவித்த ராஜீவ் கத்யால்(53) என்ற பயணி “நான் விமனத்தில் இருந்து இறங்கி பேருந்திற்காக காத்திருந்தேன். அப்போது அங்கிருந்த இண்டிகோ ஊழியர் என்னை தள்ளிப்போய் நிற்குமாறு திட்டினார். திட்டுவதற்கு பதில் பேருந்துக்கு ஏற்பாடு செய்யலாமே என நான் கேட்டேன். என்ன செய்வது என எங்களுக்கு தெரியும். நீங்கள் எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம் என அவர் கூறினார். அதன் பின் நான் பேருந்தில் ஏறச் சென்றேன். என்னை ஏற விடாமல் தடுத்தனர். மேலும், என்னை கீழே தள்ளி என் கழுத்தை நெறித்தனர்” எனக் கூறினார்.
 
இதையடுத்து இண்டிகோ நிறுவனம் ராஜூவிடம் மன்னிப்பு கேட்டதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது.