செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (19:30 IST)

என்.ஆர்.சியை அமல்படுத்தும் திட்டம் இல்லை: அமித்ஷா உறுதி!

என்.ஆர்.சியை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இல்லை என அமித்ஷா உறுதியாக கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் நிலையில், அரசு அடுத்ததாக தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகின.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி வரும் பலர் குடிமக்கள் கணக்கெடுப்புக்கு எதிராகவும் போராட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து இரு அமைச்சரவைகளிலும் விவாதிக்கவே இல்லை என கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR – National Population Register) மட்டுமே எடுக்க உள்ளதாகவும், இதற்கும் குடிமக்கள் கணக்கெடுப்பு (NRC – National Register of Citizen)க்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். என்.ஆர்.சியை நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து இதுவரை யோசிக்கக்கூட இல்லை என்று கூறியுள்ள அமித்ஷா, அசாமில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே என்.ஆர்.சி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.