18 வயது பூர்த்தியாகாத மனைவியுடன் உறவு வைத்தால் குற்றமே - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்து அவருடன் பாலியல் உறவு வைத்தால் அது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக பீகார், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் சிறுமிகளை திருமணம் செய்யும் நடைமுறை இப்போதும் பழக்கத்தில் இருக்கிறது. அதில், பல சிறுமிகள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.
இந்நிலையில், இதுகுறித்து ஒரு பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தீர்ப்பளித்த நீதிபதி “18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமியை திருமணம் செய்து, அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் அது வன்கொடுமையாகவே கருதப்படும். பாதிக்கப்பட்ட பெண் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் புகார் அளித்தால், அவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தீர்ப்பளித்தார்.