டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் எடப்பாடி மனு கொடுக்க திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. பல மாநில முதலமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், சட்டப்பேரவை தலைவர் கிரிஜா வைத்தியநாதனும், மேலும் சில அமைச்சர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சி குறித்தும், தீவிரவாதம் குறித்தும் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிறுத்தி மனு அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் முதன்முறையாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்க உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.