திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2023 (14:55 IST)

பதவியை ராஜினாமா செய்ய முதல்வர் திட்டமா? பரபரப்பு தகவல்..!

resignation
மணிப்பூரில் கலவரம் கட்டுக்கடங்காமல் இருப்பதை எடுத்து அம்மாநில முதல்வர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் கலவரம் மூண்டுள்ளது என்பதும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத மாநில அரசு திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மணிப்பூர் மாநில முதல்வர் பைரன்சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மத்திய அரசிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக தான் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய முதல்வராக யார் பதவி ஏற்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
Edited by Mahendran