வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (11:14 IST)

118 வருடங்களுக்கு பிறகு தென்பட்ட அரியவகை வாத்து! – அசாமில் ஆச்சர்யம்!

அசாமி அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பல வண்ணங்கள் கொண்ட அரிய வாத்து வகை தென்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் சீதோஷ்ண நிலை மாற்றம், நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் வரலாற்றில் பல பறவையினங்கள், விலங்கினங்கள் அழிந்துள்ளன. மேலும் பல அழியும் நிலையில் உள்ளன. அப்படியாக அரியவகை பறவையாக பட்டியலிடப்பட்டது அசாம் பகுதிகளில் தென்படும் மாண்டரின் வாத்து.

பல வண்ணங்களை கொண்ட சிறிய அளவிலான இந்த வாத்து கடந்த 118 ஆண்டுகாலமாக மனிதர்கள் கண்ணுக்கே தென்படாமல் போனதால் அவை அழிந்துவிட்டதாகவே கருதப்பட்டது. இந்நிலையில் தற்போது அசாமின் மகுரி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மாண்டரின் வாத்துகள் சில தென்பட்டுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.