பரிசு தருவதாக அழைத்து சென்று மனைவியை கொன்ற வாலிபர்....
தன்னிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை, பரிசு தருவதாக கூறி அழைத்து சென்ற வாலிபர், ஒரு பூங்காவில் அவரை கொலை செய்த விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் வசிக்கும் மனோஜ் என்பவர், 2015ம் ஆண்டு ஒரு மதுபான பாருக்கு சென்ற போது, அங்கு பணிபுரிந்த கோமல் என்ற பெண்ணை சந்தித்து, அவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கோமலுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக மஜோஜ் சந்தேகப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து கோபித்து கொண்டு கோமல் அவரின் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி தனது மனைவியை தொடர்பு கொண்ட மனோஜ், அவருக்கு ஆச்சர்யாமான பரிசு ஒன்றை தருவதாக கூறி அருகில் இருந்த பூங்காவிற்கு அழைத்துள்ளார். அங்கு கோமல் வந்ததும், கண்களை மூடிக்கொள் என கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பி கோமலும் கண்களை மூடியுள்ளர். இதையடுத்து, மறைத்து வைத்திருந்த ஒயரால், கோமலின் கழுத்தை நெறித்து அவரை மனோஜ் கொலை செய்துள்ளார்.
அதன்பின், தனது நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு தனக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த நண்பர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக பூங்காவிற்கு சென்ற போலீசார், அங்கு மனோஜை கைது செய்தனர்.