வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 22 ஜூலை 2017 (08:00 IST)

உயிரோடு மனைவியை எரித்த கணவன்: 17 வருடங்களுக்கு பின் மனம் திருந்தி சரண்டர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் ஒருவர் உயிருடன் கொளுத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இந்த நிலையில் 17 வருடங்கள் கழித்து மனம் திருந்தி தனது தவறை ஒப்புக்கொண்டு போலீசில் தற்போது சரண் அடைந்துள்ளார்.



 
 
கடந்த 2000ஆம் ஆண்டு மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் அடைந்த பிராஜி மேக்தார் என்பவர் மனைவியை உயிருடன் கொளுத்தி கொலை செய்தார். பின்னர் போலீசுக்கு பயந்து தலைமறைவாகிய இவரி போலீசார் தேடி வந்தனர்.
 
இந்த நிலையில் 17 வருடங்கள் கழித்து மனட்சாட்சிக்கு பயந்து நேற்று போகர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, அவரை வரும் 23-ம் தேதி வரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.