ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (09:41 IST)

மனைவியை வீட்டில் விட்டு காதலர் தினம் கொண்டாடிய கணவன் – கடைசியில் ஏற்பட்ட கதி !

மனைவியிடம் மாட்டிக்கொண்ட கணவர்

பிஹார் மாநிலத்தில் திருமணம் தனது கள்ளக்காதலியுடன் காதலர் தினத்தைக் கொண்டாடிய கணவர் கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தை காதலர்கள் மட்டும்தான் கொண்டாட வேண்டுமா என்ன? திருமணம் ஆனவர்களும் கொண்டாடலாம்தானே! ஆனால் மனைவியை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடனா கொண்டாடுவது. அப்படி கொண்டாடிய ஒருவரின் நிலைமை பரிதாபகரமானதாக மாறியுள்ளது.

பீஹாரைச் சேர்ந்த அந்த நபருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காதலர் தினத்தன்று வெளியே செல்வதாக சொல்லி அவர் செல்ல, அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார் அவரது மனைவி. அப்போது காதலியுடன் கணவன் இருக்க அவர்கள் இருவரையும் பொதுவெளியில் கையும் களவுமாக பிடித்த மனைவி கோபத்தில் கணவனைத் தாக்க ஆரம்பித்தார். கையும் களவுமாக மாட்டியதால் அந்த பெண்ணும் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்துள்ளார்.

இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் உருவாக, போலிஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் கோபம் அடங்காத அந்த பெண், கத்த ஆரம்பித்தார். இதையடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுரை சொல்லி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.