1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (21:58 IST)

தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டம், மேற்குவங்கத்திற்கு 8 கட்டங்களா? மம்தா பானர்ஜி ஆவேசம்

5 மாநில தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியான நிலையில் தமிழகம் கேரளா மற்றும் புதுவை ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும் அசாமில் மூன்று கட்டமாக நடத்தவும் மேற்குவங்கத்தில் 8 கட்டமாக நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
 
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 234 தொகுதிகள் உள்ள தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் போது 294 தொகுதிகளில் உள்ள மேற்கு வங்கத்தில் எதற்காக எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
அசாமிலும், தமிழகத்திலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியும் என்றால் மேற்கு வங்கத்திற்கு மட்டும் ஏன் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு? பாஜகவின் வசதிக்கு ஏற்ப இந்த முடிவா? என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்