1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (19:51 IST)

டிஸ்சார்ஜ் ஆனார் மம்தா பானர்ஜி: சக்கர நாற்காலியில் பிரச்சாரமா?

டிஸ்சார்ஜ் ஆனார் மம்தா பானர்ஜி: சக்கர நாற்காலியில் பிரச்சாரமா?
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் தான் போட்டியிடும் நந்திகிராம் என்ற தொகுதியில் பிரச்சாரம் செய்ய சென்றபோது திடீரென நான்கைந்து பேர் அவரை தள்ளி விட்டதால் காலில் காயமடைந்தார்
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சற்று முன் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இருப்பினும் அவருக்கு காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்ட நிலையில் ஓய்வு எடுக்க முடியாத சூழல் இருப்பதால் சக்கர நாற்காலி மூலம் சென்று மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார் இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது