மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜி வெற்றிப் பெற்றார்


Abimukatheesh| Last Updated: வியாழன், 19 மே 2016 (18:07 IST)
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு பொரும்பான்மையில் வெற்றிப் பெற்றுள்ளது.

 

 
 
மேற்கு வங்கத்தில் 2வது முறையாக ஆட்சி அமைக்கிறார் மம்தா பனர்ஜி. வெற்றி குறித்து பேசிய மம்தா, எங்களுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் கை ஓங்கியபோது திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது, எங்களுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்றார். 
 
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-

கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் லட்சியம் வளர்ச்சியை நோக்கியே இருந்தது, நான் ஏன் புன்னகைக்கவில்லை என்று பெரும்பாலும் மக்கள் கேட்கிறார்கள், மக்களின் புன்னகையே எனது புன்னகையே, தேர்தலின் போது எங்கள் கட்சியில் 10 பேர் கொல்லப்பட்டனர், அதையெல்லம் மீறி நாங்கள் வெற்றி அடைந்திருக்கோம், அதற்கு மக்களின் ஆதரவு தான் காரணம், அடித்தட்டு மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்போம், என்றார்.  
 


இதில் மேலும் படிக்கவும் :