வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (19:13 IST)

மொழிப் பிரச்சனையை முன்னெடுக்கிறாரா மம்தா???

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வை எதிர்க்க தடுமாறும் மம்தா, தற்போது மொழிப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார் என ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பா.ஜ.க. வென்றது.

மேலும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு பிறகு, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட் பல கட்சிகளிலிருந்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

தேர்தல் பிரச்சாரத்திலும் தேர்தலுக்கு பின்னரும், பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடைய மோதல்கள் நடந்துவருகின்றன.

இதனை தொடந்து அரசியல் சிக்கலை எதிர்கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி, ட்விட்டரில் மொழிப் பிரச்சனையைக் கிளப்பும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், நாங்கள் முன்னேறிய வங்கத்தை படைப்போம் என்றும், தான் பீகார், உத்திர பிரதேசம்,பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்குச் சென்றால் அவர்களின் மொழியைத்தான் பேசுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் அவர், தான் எங்கு சென்றாலும் அந்த மாநிலங்களின் மொழிகளைத்தான் பேசுவேன் என்றும், ஆனால் அவர்களால் மேற்கு வங்க மொழியான பெங்காலியை பேசமுடியுமா என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு மம்தா பேனர்ஜி ட்விட்டரில் பகிர்ந்ததை குறித்து, பல அரசியல் ஆய்வாளர்கள் மம்தா மொழிப் பிரச்சனையை கிளப்புகிறார் என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது.