வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 10 ஏப்ரல் 2021 (17:48 IST)

இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்பார்...பிரசாந்த் கிஷோர் கணிப்பு

மேற்கு வங்க மாநில சட்டபேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்பார் என பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மம்தா தலைமையிலான திரிணாமுள், பாஜக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 4 ஆம் கட்டமாக 40க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்  இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார். இது திரிணாமுல் காங்கிரஸார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுகவுக்கு தேர்தல் வியூக நிபுணராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டதுபோல் மேற்குவங்கத்தில்  மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸுக்கும் அவர் வியூகம் வகுத்துக் கொடுத்துவருகிறார்.

இந்நிலையில், சமீபகாலமால பாஜக தேர்தலில் தோற்கும் எனக் கூறி அவ்ந்த பிரசாந்த் கிஷோர் பாஜக வெற்றிபெறும் எனவும் திரிணாமுல் காங்கிரஸ் தோற்கும் என அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் திரிணாமுல் காங்கிரஸார் இடையே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.