அமித்ஷாவின் சவாலுக்கு ரெடி: பதில் சவால் விடும் மம்தா பானர்ஜி!!
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது தான் அடுத்த இலக்கு என தெரிவித்தார்.
இந்நிலையில், அமித்ஷாவின் சவாலுக்கு தயார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி கூறியதாவது, என்னுடன் மோதுபவர்களின் சவால்களை ஏற்றுக் கொள்கிறேன். திரிணாமூல் காங்கிரஸை பாஜக அச்சுறுத்த முயற்சிக்கிறது. நாங்கள் டெல்லியை கைப்பற்றுவோம். மேற்கு வங்கத்தை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.