1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 29 அக்டோபர் 2016 (14:19 IST)

பட்டாசு சந்தையில் தீ விபத்து: 200 பட்டாசு கடைகள் நாசம்

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியில் பட்டாசு சந்தையில் பயங்கர தீ விபத்து. இதில் 200 பட்டாசு கடைகள் எரிந்து அதிலிருந்த பட்டாசுகள் வெடித்தது. 


 

 
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகள் வைத்திருந்தனர். இந்த பட்டாசு சந்தையில் சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன.
 
பாட்டாசு சந்தையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 200 கடைகளும் பாதிக்கப்பட்டு அதிலிருந்த பட்டாசுகள் வெடித்தது. இச்சமபவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த தீ விபத்தில் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. விபத்திறகான காரணமும் இன்னும் தெரியவில்லை. மேலும் 10 தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.