புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (08:38 IST)

பெண் காவலர் ஆணாக மாறுவதற்கு அனுமதி! – மத்திய பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாலியல் மாறுபாடு கொண்ட பெண் காவலர் ஆணாக மாறுவதற்கு மத்திய பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது செயல்பாடுகள் ஒரு ஆண் போலவே இருந்து வருவதாக பலரும் கூறி வந்துள்ளனர். சிறுவயது முதலே பாலின அடையாள மாற்றம் கொண்டிருந்த அந்த பெண் தான் முழுமையாக ஒரு ஆணாக மாற முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து கடந்த 2019ம் ஆண்டில் அவர் தான் ஆணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதிக்குமாறு காவல்துறை தலைமையகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதை தொடர்ந்து இந்த மனு மத்திய பிரதேச உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் காவலர் ஒருவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்குவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.