திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (19:01 IST)

காதல் திருமணம் செய்த தம்பதியரை அடித்து உதைத்த உறவினர்கள்..

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த தம்பதியினர், மீண்டும் ஊருக்குத் திரும்பிய போது, அவர்களை அடித்து உதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரெய்லியில்  கடந்த ஆண்டில் ஒரு இளம்பெண் தனது பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டு வேறு ஊருக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
 
இந்நிலையில் மீண்டும் பெற்றோரை பார்ப்பதற்க்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்பொழுது தம்பதியினர் வருவதைப் பார்த்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை சரமாரியாக தாக்கினர்.
இந்தத் தாக்குதலில்  தம்பதியர் பலத்த காயம் அடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.