வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 22 ஜூலை 2023 (16:28 IST)

காதல் விவகாரம்....தங்கையை கொன்று தலையுடன் போலீஸ் ஸ்டேசன் சென்ற அண்ணன்

உத்தரபிரதேச மாநிலத்தில், மாற்று மதத்தவரை காதலித்த தன் தங்கையைக் கொன்று அவரது தலையுடன் போலீஸ் ஸ்டேசனுக்கு அண்ணன் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள  பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தில் வசித்து வந்தவர் இளம் பெண் ஆசிபா (18 வயது). இவரது அண்ணன் ரியாஸ்(22).

இந்த நிலையில், ஆசிபாவும், அதே கிராமத்தைச் சேர்ந்த சந்த் பாபு என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.  சில நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இதுபற்றி ஆசிபாவின் பெற்றோர்  போலீஸில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழகுப் பதிவு செய்து, அவரது தங்கை ஆசிபா மற்றும் காதலன் சந்த் பாபுவை கண்டுபிடித்தனர். பின்னர், ஆசிபாவை அவரதது குடும்பத்தினரும்  ஒப்படைத்த பின்னர், பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீட்டை வீட்டு வெளியேறி காதலுடன் சென்றது தொடர்பாக ஆசிபாவுக்கும், அவாது அண்ணன் ரியாசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதில், ஆத்திரமடைந்த ரியாஸ் தன் தங்கையின் தலையை வெட்டி, அந்த தலையுடன் போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார்.

தலையுடன் வந்த ரியாஸை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை கைது செய்து, ஆசிபாவின் தலை மற்றும், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.