திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (12:47 IST)

மக்களவை தேர்தல் பணிகள் மும்முரம்..! தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை..!!

Rajiv Kumar
மக்களவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 
 
நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
 
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
இதில் தமிழ்நாடு தேர்தல் பார்வையாளர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக பங்கேற்றனர். தேர்தல் பாதுகாப்பு, தேர்தல் பணிகள், செலவினங்கள் கணக்கிடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். 

 
பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை பொது பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்களை நியமிப்பது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பது, புகார் மீது உடனடி நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் தேர்தல் பார்வையாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.