1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:22 IST)

கேரளாவில் மீண்டும் ஊரடங்கு கெடுபிடி!!

மொகரம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ஊரடங்கில் அரசு தளர்வுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தாலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 
 
மொகரம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுகிழமை ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டது. 
 
தற்போது மீண்டும் வருகிற ஞாயிற்றுகிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.