1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: புதன், 22 ஜூன் 2016 (13:12 IST)

பீகாரில் மின்னல் தாக்கி 46 பேர் பலி

பீகாரில் தற்போது பருவமழை தொடங்கியது. இதையடுத்து  மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்துவருகிறது.


 

இந்நிலையில் மின்னல் தாக்கி 46 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பலியானர்வர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. மேலும் வெள்ளத்தால் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக பீகார் மாநிலம் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.