ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 மே 2022 (19:44 IST)

ரூ.80,000 கோடிக்கு மேல் இழப்பு: பெரும் சரிவை சந்தித்த எல்.ஐ.சி ஐபிஓ

lic ipo
எல்ஐசி ஐபிஓ வாங்கினால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என பொதுமக்கள் பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்கள் போட்டி போட்டு வாங்கிய நிலையில் தற்போது எல்ஐசி பங்குகளின் விலை 80 ஆயிரம் கோடிக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 கடந்த 4ஆம் தேதி எல்ஐசி ஐபிஓ பட்டியலிடப்பட்டது. 949 ரூபாய் என்ற விலையில் வெளியிடப்பட்ட இந்த பங்கு பெரும் சரிவு ஏற்பட்டு முதல் நாளிலேயே 867 என விற்பனையானது 
 
அதன் பிறகு சென்செக்ஸ் உயர்ந்தும் கூட எல்.ஐ.சி பங்குகள் மட்டும் உயரவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது 
 
இன்று எல்ஐசியின் பங்குகள் 821 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது இதனால் இந்த பங்கை வாங்கிய முதலீட்டாளர்களுக்கு சுமார் 80 ஆயிரம் கோடி நஷ்டம் என்பது குறிப்பிடத்தக்கது