1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 6 மார்ச் 2017 (19:12 IST)

திருமணத்துக்கு விடுமுறை மறுப்பு: ரயில்வே போலீஸ் தற்கொலை

திருமணத்துக்கு பொதுமான விடுமுறை வழங்காததால் மனமுடைந்த ரயில்வே போலீஸ் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 


 

 
மும்பை செண்டரல் ரயில்வே நிலையத்தில் பணிபுரிந்து வந்த ரயில்வே போலீஸ் தல்வீர் சிங்(23) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்தது. இதனால் தனது அதிகாரியிடம் விடுமுறை கேட்டுள்ளார். 5 நாட்கள் மட்டும் வழங்கப்பட்டது.
 
இதன் காரணமாக மன முடைந்த தல்வீர் சிங் கடந்த 4ஆம் தேதி ரயில்வே கட்டுப்பட்டு அறையில் அவர் அவைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.