திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 ஜூலை 2018 (14:42 IST)

ராஜ்தாக்கரே-லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு: பாஜக அதிர்ச்சி

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியுடன் இணக்கமாக இருந்த ராஜ்தாக்கரே கடந்த சில நாட்களாக பாஜகவையும் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்க அனனத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் பாஜகவின் ஆதரவாளர் என்று அரசியல் கட்சி தலைவர்களால் முத்திரை குத்தப்பட்டுள்ள ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று மும்பையில் ராஜ்தாக்கரே மற்றும் அவருடைய மனைவி ஷர்மிளா தாக்கரே ஆகியோரக்ளை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் சினிமா, அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. தான் ஒரு பாஜக ஆதரவாளர் இல்லை என்பதை காண்பிக்கவே ரஜினி இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும் இந்த சந்திப்பால் பாஜக வட்டாரம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.